கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செல்லுபடியாகும் - சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

முன்னாள் தமிழக செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்கப்பட்டது செல்லுபடியாகும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கிரிஜா வைத்தியநாதன் நியமனத்தை எதிர்த்த பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வழக்கினை தள்ளுபடி செய்து, அவருக்கு விதிக்கபட்ட  இடைக்கால தடையினைநீக்கியது சென்னை உயர்நீதிமன்றம்.

மேலும், நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்க கிரிஜா வைத்தியநாதன் தகுதி இல்லை என்று கூற முடியாது என்றும் .

நிபுணத்துவ உறுப்பினரின் நிபுணத்துவம் என்பது நீர்த்துப் போக கூடாது என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்