படத்துக்காக என்னையும்....”அப்படி.”.!! வருத்தத்துடன் சொன்ன நடிகை கிரண்

Kiran Rathod Tamil Cinema Tamil Actress
By Karthick Oct 01, 2023 02:30 PM GMT
Report

தான் சினிமாவில் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை நடிகை கிரண் வெளிப்படையாக சொன்னது வைரலாகி வருகின்றது.

நடிகை கிரண்

வடஇந்திய நடிகைகளில் அறிமுகமான சில படங்களிலேயே தென்னிந்திய மொழி படங்களில் உச்ச நடிகையாக மாறியவர் நடிகை கிரண் ரத்தோட். விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கிரண், அடுத்தடுத்து வில்லன், அன்பே சிவம், வின்னர் என தொடர் வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமாகினர்.

kiran-shares-about-her-bad-experience-in-cinema

உடலெடை அதிகரித்த நிலையில், படங்களில் ஒருப்பாடலுக்கு நடனமாட வாய்ப்புகள் வரவே, அதனையும் செய்தார் கிரண். விஜயுடன் "திருமலை", விஷாலுடன் "திமிரு" போன்ற படங்களில் அவ்வாறு நடித்த அவர் பின்னர், துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார். பின்னர் அந்த வாய்ப்புகளும் அவருக்கு குறைய, தற்போது பெரிதாக படங்களில் கிரண் நடித்திரவில்லை.

கடைசியாக தமிழில் சுந்தர்.சி'யின் "முத்தின கத்திரிக்காய்" படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தான் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து கவர்ச்சியான படங்களை பதிவிட்டு வருகின்றார்.

கசப்பான அனுபவம்

நடிகைகள் தங்களுக்கு திரைத்துறையில், ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை குறித்து பேசி வரும் சூழலில், கிரண் ரத்தோட்டும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். அந்த பேட்டியில், “தென்னிந்திய படங்களில் பிரபலமான பிறகு, இந்தியில் நடிக்க சென்றப்போது அங்கு பெரிய வரவேற்பு கிடைக்காததால் மீண்டும் சென்னைக்கு வந்து விட்டதாக கூறிய கிரண், சினிமாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மன அழுத்தம் ஏற்படுத்தியது என வருத்ததுடன் கூறினார்.

kiran-shares-about-her-bad-experience-in-cinema

படஙக்ளில் நடிப்பதற்கு ஒப்பந்தம் போட்டதும் சிலர் அவர்களது சுயரூபத்தை வெளி காட்டுவார்கள் என்ற அவர், சர்வ சாதாரணமாக - வெளிப்படையாக "அது" குறித்து கேட்பார்கள் என கூறி, அப்போதெல்லாம் உடனே அந்த இடங்களில் இருந்து வெளியேறி விடுவேன் என்றார்.