க்ளாமராக புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கிரண் - ஷாக் ஆன ரசிகர்கள்..!
நடிகை கிரண்
நடிகை கிரண் என்றாலே ஒன்று ஜெமினி இன்னொன்று வின்னர். ‘ஜெமினி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் கிரண்.
நடிகை கிரண் இவரது சொந்த ஊர் ராஜஸ்தான். இவர் ‘வில்லன்’, ‘வின்னர்’, ‘தென்னவன்’, ‘அன்பே சிவம்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஷாலின் ‘திமிரு’ படத்தில் ஒரு குத்துப் பாடலில் ஆடியிருந்தார். அதன் பிறகு அவர் தமிழ் சினிமாவில் காணாமல் போனார். கிளாமரில் தாராளம் என்பதால் கோலிவுட்டிலிருந்து அப்படியே டோலிவுட்டுக்கு தாவினார்.
செயலி மூலம் பணம் வசூல்
சமீபத்தில், கிரண் ஒரு செயலியை உருவாக்கியதாக தகவல் வெளியானது. அந்த செயலிக்கு கிரண் தனது பெயரையே சூட்டி, அந்த செல்போன் செயலியில், தன்னுடன் ஆடியோவில் பேச, வீடியோ காலில் பேச, தனது கவர்ச்சி படங்களை நேரடியாக வாடிக்கையாளரின் செல்போனுக்கு அனுப்பி வைக்க என பல சேவைகளுக்கு தனித்தனியாக கட்டண விவரமும் குறிப்பிடப்பட்டிருந்தது.
10 நிமிட வீடியோகாலுக்கு ரூ.15ஆயிரம், இன்பாக்ஸில் ஹாட் போட்டோவை தட்டிவிட வேண்டுமென்றால் ரூ.2 ஆயிரம், கிரணை நேரடியாக சந்திக்க வேண்டுமென்றால் ரூ.1.5 லட்சம் என பல கட்டண விவரங்களை அந்த செயலியில் வைத்திருத்திருக்கிறார் கிரண். இந்த செயலியை பயன்படுத்தவே வாடிக்கையாளர்கள் ரூ.49 கட்டணம் கட்டவேண்டும். இந்த செயலிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியானது.
அரை நிர்வாண புகைப்படம்
இந்நிலையில், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் கிரண் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது மேலாடை எதுவும் அணியாமல் அரை நிர்வாணமாக கண்ணாடி முன் நின்று உச்சகட்ட கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் வாயடைத்து அப்படியே ஷாக்காகி உள்ளனர்.