இந்திய அணியின் வருங்கால நாயகன் இவர்தான்... முன்னாள் வீரரின் அதிரடி கணிப்பு...

Rishabh pant Kiran more
By Petchi Avudaiappan May 28, 2021 09:40 AM GMT
Report

இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக ரிஷப் பண்ட் உருவெடுத்து வருவதாக முன்னாள் இந்திய வீரர் கிரன் மோர் தெரிவித்துள்ளார்.

தோனியின் ஓய்வுக்கு பிறகு அவரது இடத்தில் களமிறங்கி வரும் ரிஷப் பண்ட் தனது ஆரம்ப கால செயல்பாடுகளால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

இந்திய அணியின் வருங்கால நாயகன் இவர்தான்... முன்னாள் வீரரின் அதிரடி கணிப்பு... | Kiran More Names Future India Captain

ஆனால்கடந்த ஓராண்டாக விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே மாஸ் காட்டியதால் தற்போது அணியில் தவிர்க்க முடியாத வீரராக பண்ட் உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் கிரன் மோர் ரிஷப் பண்ட் மிக விரைவில் இந்திய அணியின் கேப்டனாவார் என்றும், அவர்தான் அணியை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.