தமிழக ஆளுநராக கிரண்குமார் ரெட்டி?

BJP
By Fathima Aug 30, 2026 05:34 AM GMT
Report

ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர் பொறுப்பு ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஆந்திரா முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான கிரண்குமார் ரெட்டி தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? | Kiran Kumar Reddy Tn Governor

பிரதமர் மோடியின் உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளின் பயணம் முடிந்த பின்னர் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகலாம்.

மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யும் போது தமிழக ஆளுநர் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.

2010 முதல் 2014 வரை ஆந்திராவின் முதலமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.