கிரண்பேடி நீக்கம் பாஜகவின் கபட நாடகம்: மு.க.ஸ்டாலின்

politics puducherry narayanasamy
By Jon Feb 18, 2021 02:28 AM GMT
Report

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைத் மாற்றியிருப்பது கண்துடைப்பு கபட நாடகம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நேற்றிரவு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிரடியாக நீக்கப்பட்டார். குடியரசுத் தலைவரிடம் முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து புகார் வைத்து வந்தார்.

இதனால் கிரண்பேடி அதிரடியாக நீக்கபட்டதாக கூறப்பட்டது. கிரண்பேடிக்கு பதிலாக, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்குப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு வழங்கப்படுள்ளது இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிக்கை வெளியிட்டுள்ள அறிகையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாற்றப்பட்டிருப்பது மிகுந்த காலதாமதமான அறிவிப்பு என்றும் அதிகார மோகம் கொண்ட ஒரு துணைநிலை ஆளுநரை இவ்வளவு நாள் பதவியில் வைத்திருந்ததே மிகப்பெரிய தவறு என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை ஒட்டுமொத்தமாக முடக்கி முறித்துப் போட்ட மத்திய பாஜக அரசு, தேர்தலுக்கு மூன்று மாதங்கள் இருக்கின்ற நேரத்தில் மாற்றியிருப்பது கண்துடைப்பு கபட நாடகம். பாஜக வின் தரம் தாழ்ந்த அரசியலை புதுச்சேரி மக்கள் ஒரு போதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.