நான் என் கடமையினை தான் செய்தேன்- கிரண் பேடி

public governor thankyou
By Jon Feb 18, 2021 11:29 AM GMT
Report

தார்மீக அடிப்படையில் எனது கடமையை செய்தேன் என கிரண் பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். புதுவை ஆளுநர் கிரண்பேடி, அரசின் நலத்திட்ட உதவிகளை தடுக்கிறார் என பல்வேறு புகார்களை அம்மாநில புத முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து புகார் அளித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட்டர். இந்நிலையில், ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட கிரண் பேடி,தனது ட்வீட்டர் பதிவில் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக அரசியலமைப்புக்கு உட்பட்டு தார்மீக அடிப்படையில் எனது கடமையை செய்தேன் என்றும் புதுச்சேரிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

அது தற்போது மக்களின் கைகளில்தான் இருக்கிறது எனவும் அறிக்கையில் கூறியுள்ளார். மேலும, துணைநிலை ஆளுநர் பதவி அளித்து பணியாற்ற வாய்ப்பு அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.