புதுச்சேரி கவர்னர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி நீக்கம்
புதுச்சேரி கவர்னர் பதவியில் இருந்து கிரண் பேடி நீக்கப்பட்டு,கூடுதல் பொறுப்பாக அந்த பதவி தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. புதுசேரியில் கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து கவர்னர் கிரண்பெடியை திரும்ப பெறக்கோரி மனு அளித்தனர். இதற்கிடையே காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்று புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் திடீர் என போரட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் திடீர் என புதுச்சேரி கவர்னர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி நீக்கப்பட்டார்.
புதுச்சேரி கவர்னராக தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.