எங்கள் இதயங்களில் கொடி நாட்டியிருக்கும் நீங்கள் எப்போதும் இராஜாதான் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin DMK
By Irumporai Jun 02, 2023 06:38 AM GMT
Report

இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உலகுக்கே புரட்சி

காலைப் பொழுது இனிதாய் மலர - பயணங்கள் இதமாய் அமைய - மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற - துன்பங்கள் தூசியாய் மறைய - இரவு இனிமையாய்ச் சாய தமிழ்நாட்டின் தேர்வு 'இசைஞானி' இளையராஜா.

அவர் இசைக்கருவிகளை மீட்டுவதில்லை; நம் இதயங்களை வருடுகிறார். அவரே உணர்வாகி நம்முள் உருகுகிறார். தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல இசை உலகுக்கே அவர் ஒரு புரட்சி.

எங்கள் இதயங்களில் கொடி நாட்டியிருக்கும் நீங்கள் எப்போதும் இராஜாதான் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | King Hearts And Planted A Flag Cm Stalin

எப்போதும் இராஜாதான்

அதனால்தான், அவரது இசையின் நுட்பத்தை ஆழ்ந்து இரசித்து, அவரை 'இசைஞானி' எனப் போற்றினார் முத்தமிழ் வித்தகர் தலைவர் கலைஞர். இசை கொண்டு அவர் நிகழ்த்தும் மாய வித்தையில் மனம் மயங்கிச் சொக்கிக் கிடக்கும் இரசிகனாக - உங்களில் ஒருவனாக அந்த மாபெரும் கலைஞனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி மகிழ்ந்தேன். எங்கள் இதயங்களில் கோட்டை கட்டிக் கொடி நாட்டியிருக்கும் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து என வாழ்த்தியுள்ளார்.