வடகொரியா: தேர்தலில் கிம் ஜாங் உன் வெற்றி! 1957 பின் முதல் முறை எதிர்ப்பு வாக்குகள் பதிவு

North Korea Election World
By Vinoja Mar 18, 2026 11:20 AM GMT
Report

வட கொரியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் கிம் ஜோங் உன்-னின் தொழிலாளர் கட்சி, 99.93 சதவிகித வாக்குகளை பெற்று அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது.

கிழக்கு ஆசியாவின் ஒரு சோசலிச நாடாக அறியப்படும் வடகொரியா அதன் சர்வாதிகார ஆட்சியால் உலகளவில் பிரபலமாக திகழ்கின்றது.

வடகொரியா: தேர்தலில் கிம் ஜாங் உன் வெற்றி! 1957 பின் முதல் முறை எதிர்ப்பு வாக்குகள் பதிவு | Kim Jonguns Workers Party Wins In Northkorea

அணு ஆயுதங்கள், சக்திவாய்ந்த ஏவுகணைகளை தயாரித்து, தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுக்கே பதற்றம் கொடுக்கும் ஒரு நாடாக வடகொரியாக இருக்கின்றது.

கடந்த 2011 ஆம் ஆண்டும் முதல் ஒரு கட்சி ஆட்சி முறை நிலவும் நாடக அறியப்படும் வட கொரியா  கிம் ஜோங் உன் தலைமையில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், வடகொரியாவில் 15-வது மக்கள் பேரவையின் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக பொதுத் தேர்தல் கடந்த மார்ச் 15 ஆம் திகதி நடைபெற்றது.

அதில் விவசாயிகள், அதிகாரிகள், அறிஞர்கள் என 687 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில்  ஒவ்வொரு தொகுதியிலும் ஒரேயொருவர் மட்டும் போட்டியிட்டனர். இதனால், இந்தத் தேர்தலை காட்சிக்கு நடத்தப்பட்ட தேர்தல் ( பெயரளவில்) என நிபுணர்கள் குறிப்பிட்டனர். 

இந்நிலையில், உலக நாடுகளை ஆச்சர்யப்படுத்தும் வகையில், இந்தத் தேர்தலில் 99.99 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. அதில், அதிபராகவுள்ள கிம் ஜோங் உன்னின் தொழிலாளர் கட்சி 99.93 சதவிகித வாக்குகளுடன் முழு ஆதரவை பெற்றுள்ளது இதனால்  மீண்டும் அதிபராக கிம் ஜாங் உன் தெரிவாகியுள்ளார். 

1957-க்கு பின் முதல்முறையாக எதிர்ப்பு வாக்குகள் பதிவு

வடகொரிய அரசு ஊடகமான கே.சி.என்.ஏ வெளியிட்டுள்ள தகவல்களின் பிரகாரம், பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 99.99 சதவிகித பேர் வாக்களித்துள்ளனர்.

வெளிநாடுகளிலோ அல்லது கப்பல்களிலோ பணிபுரிவதால் 0.0037 சதவிகித பேரால் மட்டுமே வாக்களிக்க முடியவில்லை என்றும், 0.00003 சதவிகித பேர் வாக்களிப்பதைத் தவிர்த்துள்ளனர்.

வாக்களித்தவர்களில் 99.93 சதவிகித பேர் வேட்பாளர்களை ஆதரித்துள்ளனர். அதேசமயம் 0.07 சதவிகித பேர் கிம் ஜோங் உன்னுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

1957 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக பேரவைத் தேர்தலில் அதிகளவிலான எதிர்ப்பு வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த தேர்தலில் கல்லிம்கில் தொகுதி எண் 5-ல் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங்கும் வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.