உடல் எடை குறைந்து காணப்பட்ட அதிபர் கிம் - உலக நாடுகள் இன்ப அதிர்ச்சி
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சமீபத்திய புகைப்படங்கள் உலக நாடுகளிடையே மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
மிகவும் கண்டிப்பான நபர் என பெயரெடுத்த வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் உடல்நிலை குறித்தும், அவர் உயிரிழந்துவிட்டதாகவும் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் கிம் உடல்நிலைக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தது உண்மை என வடகொரியா அரசு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தது.
இதனிடையே அதிபர் கிம் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கெல்லாம் தனது ஒற்றைச் சிரிப்பின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். வடகொரியா நாடு தோற்றுவிக்கப்பட்ட 73வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக நள்ளிரவு பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணிக்கு வருகை தந்த அதிபர் கிம் ஜோங் உன்னை இரண்டு பள்ளிக்குழந்தைகள் அழைத்து வரும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்தப் புகைப்படம் உலக நாடுகளிடையே கவனத்தைப் பெற்றுள்ளது. மேலும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அவருக்கு பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்றனர்.பின்னர் நிகழ்ச்சி முழுவதும் அணிவகுத்து வந்தவர்களை பாராட்டிய கிம் ஜாங் உன், அங்கிருந்த மூத்த அதிகாரிகளுடன் சிறிது நேரம் அரட்டை அடித்தார்.
இதற்குமுன் 140 கிலோ எடையுடன் இருந்த கிம், தற்போது 10 முதல் 12 கிலோ எடை குறைந்து ஒல்லியாக காணப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.