கொரோனாவை எங்கள் ஸ்டைலில் சமாளிக்கிறேம் : கிம் ஜாங் உன்

vaccine North Korea kimjongun
By Irumporai Sep 04, 2021 01:30 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

 கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் தலைவராக கருதப்படும் வடகொரிய அதிபர் கிம் ஜான் உங். கடந்த மாதம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் உடல் நலம் மிகவும் மோசமானதாகவும், அபாய கட்டத்தில் அவர் இருப்பதாக தகவல் வெளியாக எனக்கு எண்ட் கார்டு போடுறிங்களா என வட கொரிய ஊடகத்தில் தோன்றி அதிர்ச்சி கொடுத்தார் கிம்.

இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது உள்ள ஒரே வழி தடுப்பூசிதான். இதனால், அனைத்து நாடுகளும் தங்களது குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரப்படுத்தியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் புதிய திட்டம் ஒன்றின் மூலம் வடகொரியாவுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் அந்த தடுப்பூசிகள் தங்களுக்கு வேண்டாம் என நிராகரித்ததோடு கொரோனா தொற்றை சமாளிக்க நம் ஸ்டைலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தொற்று பரவலை கட்டுப்படுத்த போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ஒருபோதும் மீறக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது