அதெல்லாம் செல்லாது லாக்டவுன் தான் : வட கொரியாவில் முழு ஊரடங்கினை அமல்படுத்திய அதிபர் கிம்

COVID-19 Kim Jong Un
By Irumporai May 12, 2022 04:51 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

வட கொரியாவில் முதல் கொரோனா பதிவாகியுள்ளதால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ‘முழு ஊரடங்கினை அமல்படுத்தியுள்ளார் அதிபர் கிம் ஜாங் உன்.

கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் உலகையே அச்சுறுத்திய கொரோனா தற்போது அதன் தாக்கம் மெல்ல குறைந்து வந்தாலும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் உலக நாடுகள் தளர்வுகளை அமல்படுத்தின.

இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் உலக நாடுகளில் தொடங்கிய போது கொரோனாவிலிருந்து பாதுகாக்க தடுப்பூசியினை பொதுமக்களுக்கு செலுத்த தொடங்கின, ஆனால் வட கொரியா மட்டும் தங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனா இல்லை என கூறி வந்தது.

அதே சமயம் , வடகொரியா சீனா ,ரஷ்யா மற்றும் உலக சுகாதார அமைப்பின் கொரோனா தடுப்பூசிகளை நிராகரித்து வந்த நிலையில் , தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு,வட கொரியாவில் முதல் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

அதெல்லாம் செல்லாது லாக்டவுன் தான்  : வட கொரியாவில் முழு ஊரடங்கினை அமல்படுத்திய அதிபர் கிம் | Kim Jong Un Lockdown After North Korea

இதனால்,வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்,கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக நாட்டின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி,கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கினை அறிவித்துள்ளார்.

அதே சமயம் வெகு சீக்கிரமே கொரோனாவை அகற்றுவோம் , பொது மக்களின் விழிப்புணர்வின் காரணமாக ஊரடங்கை சமாளித்து கொரோனாவை நாங்கள் நிச்சயமாக வெல்வோம்” என்று கிம் ஜாங் உறுதியளித்துள்ளார்.

கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது தடுப்பூசி நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்ட கிம் , தற்போது ஊரடங்கு மற்றும் கொரோனா பரவலை எவ்வாறு சமாளிக்கப்போகின்றார் என்பதுதான் பெரும் கேள்வியாக உள்ளது.