இதுக்கெல்லாம் ஊரடங்கா ? துப்பாக்கி குண்டுகள் மாயமானதால் லாக் டவுன் போட்ட அதிபர் கிம் : சோகத்தில் வடகொரியா

North Korea
By Irumporai Mar 29, 2023 06:04 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ராணுவ வீரர்களிடம் இருந்து 600 துப்பாக்கி குண்டுகள் காணாமல் போனதால் , அந்த துப்பாக்கி குண்டுகள் கிடைக்கும் வரை ஊரடங்கினை அமல்படுத்தியுள்ளார் வட கொரிய அதிபர்.

காணாமல் போன துப்பாக்கி குண்டு

வட கொரியாவின் ரியாங்காங் மாகாணத்தில் வடகொரிய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் அப்போது ராணுவவீரர்களிடம் இருந்து 600 க்கும் அதிகமான துப்பாக்கி குண்டுகள் காணாமல் போய் உள்ளது. இந்த விவகாரம் நேரடியாக அதிபர் கிம் பார்வைக்கு சென்றுள்ளது , உடனடியாக தேடுதல் வேட்டையினை இறங்க உத்ரவிட்டுள்ளார் வட கொரிய அதிபர்,பல நாட்களாக தேடியும் அவர்களால் துப்பாக்கி குண்டுகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஊரடங்கு அமல்  

இந்த நிலையில் துப்பாக்கி குண்டுகளை கண்டுபிடிக்கும் வரை ஹைசன் நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தபடுவதாக அதிபர் கிம் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுக்கெல்லாம் ஊரடங்கா ? துப்பாக்கி குண்டுகள் மாயமானதால் லாக் டவுன் போட்ட அதிபர் கிம் : சோகத்தில் வடகொரியா | Kim Jong Un Hasnorth Korean City Lockdown

மேலும் இது தொடர்பான விசாரணைக்கு அந்த பகுதியில் உள்ள அனைவரும் ஒத்துழைக்குமாறு கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது , இதை தொடர்ந்து தற்போது அங்கு வீடு வீடாக சென்று அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.