கிம் ஜாங் உன்னின் கையை தைரியமாக பிடித்து செல்லும் இவர் யார் தெரியுமா? - சூப்பரான சம்பவம்
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் பெண் தொகுப்பாளர் ஒருவருக்கு திடீரென்று அளித்த பரிசு அனைவரையும் ஆச்சரியத்தில் அசத்தியுள்ளது.
கிழக்காசிய நாடான வடகொரியாவின் அதிபராக இருக்கும் கிம் ஜாங் உன் கடுமையான தண்டனைகளுக்கும், சர்ச்சையான சம்பவங்களுக்கும் பெயர் போனவர். அடிக்கடி ஏவுகணை, அணுஆயுத சோதனைகளை நிகழ்த்தி அமெரிக்காவை அலற வைப்பவர்.

இவரது நாட்டில் சட்ட திட்டங்களை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவது வழக்கம். இதனால் இவரை அனைத்து நாட்டு மக்களும் நன்கு அறிவர். இதனிடையே அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக அவர் செயல் ஒன்றை செய்துள்ளார்.
அதாவது கிம் ஜாங் உன் 70 வயது நிரம்பிய பெண் தொகுப்பாளருக்கு அடுக்குமாடி சொகுசு பங்களாவை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். கடந்த 1970ம் ஆண்டில் இருந்து வடகொரியாவின் அரசு செய்தி தொலைக்காட்சியில் மூத்த தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் ரி சுன் ஹி 1994 ஆம் ஆண்டு நிகழ்ந்த தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன் தாத்தா கிம் இல் சுங் மரணம் முதல் 2006ல் நடந்த அணு ஆயுத சோதனை வரை வடகொரியாவின் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை நாட்டு மக்களுக்கு வழங்கினார்.
பார்வையாளர்களை துக்க செய்திகளை சோகமாக கூறி அழ வைப்பதிலும், மகிழ்ச்சியான செய்திகளை அதற்கான வார்த்தைகளை பயன்படுத்தி கொண்டாட வைப்பதிலும் ரி சுன் ஹி பெயர் பெற்றவர். இதனால் அவருக்கு கிம் சொகுசு பங்களா ஒன்றை பரிசளித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கிம், ரி சுன் ஹி வடகொரியா நாட்டின் "பொக்கிஷங்களில்" ஒருவர். சிறுவயதில் இருந்தே தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இவரை அவ்வளது எளிதாக விட்டு விட முடியாது. இவர் எனது ஆட்சியின் குரலாக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
அதேசமயம் புதிய பங்களாவை பரிசளித்த கிம்முக்கு ரி சுன் ஹி தனது நன்றியை தெரிவித்துள்ளார். இவர் சமீபத்தில் நடந்த ராணுவ அணிவகுப்பை கிம் ஜாங் உன்னுக்கு அடுத்தபடியாக உயரமான பால்கனியில் இருந்து பார்வையிட்டார்.வடகொரியாவின் நிறுவன தலைவராக உள்ள கிம் இல் சுங்கின் 110வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan