அடையாளம் தெரியாத வானம் மோதி மோட்டர் வாகன ஆய்வாளர்
கரூர் அருகே வெங்ககல்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த மோட்டார் வாகனம் ஆய்வாளர் கனகராஜ் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், தாந்தோணி மலை அருகே உள்ள வெங்கடம்பட்டி பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டார்.
அவர் மீது மோதிய வாகனம் நிற்காமல் சென்றுள்ளது.இதை கண்டு அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.