உல்லாசத்திற்கு வர மறுத்ததால் நடுரோட்டில் கொடூரமாக தாக்கிய தங்கையின் கணவன்
தங்கையின் அக்கா உல்லாசத்திற்கு வர மறுத்ததால் நடுரோட்டில் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல முறை பாலியல் அத்துமீறல்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த தகரகுப்பம் ஒட்டனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிசாமி. இவரது மனைவி கவுதமி (32). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கவுதமியின் கணவர் முனுசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால், குடும்பத்தின் வறுமை காரணமாக கவுதமி ராணிப்பேட்டையில் கூலி வேளைக்கு சென்று குடும்பத்தை பார்த்து வந்துள்ளார்.
கவுதமியின் தங்கை பிரியா. இவரது கணவர் சஞ்சீவிராயன்(35), கூலித்தொழிலாளியான இவர் தனிமையில் இருக்கும் கவுதமியிடம் ஆசைக்கு இணங்குமாறு குறி பல முறை பாலியல் அத்திமிறல்களில் ஈடுபட்டு உள்ளார்.
அடித்தே கொன்ற மைத்துனர்
இதை பொறுத்து கொள்ள முடியாமல் கவுதமி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இதனையடுத்து காவல்துறையினர் சஞ்சீவியியை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த சஞ்சீவிராயன் கவுதமி வேலைக்கு சென்று வந்து கொண்டு இருக்கும் போது அவரை வழி மறைத்து ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
மேலும் கருங்கல் மற்றும் இரும்பு கம்பிகளை கொண்டு சராமரியாக தாக்கியுள்ளார் இதனால் நிலை குலைந்த கவுதமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்துலேயே உயிரிழந்தார் .இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதியு செய்து தலைமறைவான சஞ்சீவிராயனை தேடி வருகின்றனர் .