லக்கிம்பூர் விவசாயிகள் கொலை விவகாரம் - மத்திய அமைச்சர் மகன் ஆஜர் - போலீசார் தீவிர விசாரணை
லக்கிம்பூரில் கார் ஏற்றி விவசாயிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் மத்திய அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஆஜரானார். உத்தரபிரதேசம் மாநிலம், லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்யும் வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலானது.
அந்த கார் மத்திய அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் தான் என்றும் அவர்தான் கார் ஏற்றி கொன்றார் என்றும் விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அதனால், ஆசிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஆசிஷ் மிஸ்ராவிடம் விசாரணை நடத்த தாமதம் செய்ததற்கு நேற்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், லக்கிம்பூரில் உள்ள குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறார். அவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.