கொலையாளிகள் விடுதலையாகலாம் ஆனால் .. ஜோதிமணி எம்.பி ட்வீட்

By Irumporai May 21, 2022 01:11 PM GMT
Report

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மழைத்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்றைய நவீன,தொழில்நுட்ப இந்தியா ராஜீவின் கனவு,தொலைநோக்கு.ராஜீவ் அன்பின் உருவம்,ஆளுமையின் வடிவம்,இந்தியாவின் பெருமை.

இழப்பு எங்களுக்கு மட்டுமல்ல.தேசத்திற்கும் தான். அவரது கொலையாளிகள் விடுதலையாகலாம். ஆனால் குற்றவாளிகளே. கொண்டாடப்படவேண்டியவர்கள் அல்ல.’ என பதிவிட்டுள்ளார்.