மாணவி கொலை - இளைஞர் முகத்தை ஏன் மறைத்தீர்கள்? வழக்கறிஞர்கள் வாக்குவாதம்!
மாணவி கொலை வழக்கில் சதீஷ் என்ற இளைஞருக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாணவி கொலை
சென்னை கிண்டியை அடுத்துள்ள ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சந்தியா (20). தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் சந்தியாவுக்கு அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர் காதல் தொல்லை கொடுத்துவந்ததாக கூறப்படுகிறது.

சதீஷூம் அதே கல்லூரியில் படித்து வந்த நிலையில், நேற்று சந்தியாவிடம் பேசுவதற்காக அவரை பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் சந்தித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நீதிமன்ற காவல்
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் திடீரென சந்தியாவை அந்த வழியாக வந்த மின்சார ரயிலில் தள்ளியுள்ளார். இதில் மின்சார ரயிலில் மோதி பலத்த காயமடைந்த சந்தியா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து பயந்துபோன சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதனைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய சதீஷை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் சென்னை துரைபாக்கத்தில் பதுங்கியிருந்த சதீஷை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதனையடுத்து தற்போது சதீஷ்க்கு அக்.28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், முகத்தை மறைத்து இளைஞரை அழைத்து வந்தீர்கள் என காவல்துறையினருடன் வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.