அரக்கோணம் அருகே 2 பேரை கொலை செய்த சம்பவம் - 200க்கு மேற்பட்டோர் சாலை மறியல்!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சோகனூர் காலணியை சேர்ந்த அர்ச்சுனன் (21). சௌந்தர் (26). மற்றும் செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சூர்யா (23). மதன் (16) ஆகியோர் சித்தாம்பாடியில் போதையில் இருந்த போது பெருமாள் ராஜபேட்டையைச் சேர்ந்தவரும், அரக்கோணம் அதிமுக மேற்கு ஒன்றிய செயராளர் பழனி மகன் சத்யா (28) என்பவருக்கும் தேர்தல் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சத்யாவுடன் 10 பேர் கொண்ட கும்பல் குடி போதையில் அங்கு இருந்துள்ளனர்.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையே முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் நான்கு பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த சோகனூர் மக்கள் காயமடைந்த 4 பேரையும் திருத்தணி மருத்துவனையில் சேர்த்தனர். இதில் செம்பேடு சேர்ந்த திருமணமாகி 10 நாட்களே ஆன புதுமாப்பிள்ளை சூர்யா (24) மற்றும் சோகனூர் அர்சுனன் (21) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரழந்தனர்.
இச்சம்பவம் குறித்த தகவலறிந்த அரக்கோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதற்கிடையில் திருமாணமாகி 10 நாட்களான சூர்யாவின் உறவினர்கள், 8 மாதம் கை குழந்தையுடன் காணப்படும் அர்சுனன் மனைவி லஷ்மியின் நிலைக்கண்டும் கிராமமே சோகமாய் காணப்படுகிறது. மேலும் கொலை வெறி தாக்குதல் நடத்தி தப்பித்தவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கையை எடுக்ககோரி சோகனூர் மக்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் இரவிலிருந்து சாலையில் அமர்ந்து மறியல் செய்து வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. பதற்றதை தணிக்க 50க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே இரவு சோகனூர் அருகே பெருமாள் ராஜ பேட்டையை சேர்ந்த ராஜவேலு என்பவருக்கு சொந்தமான டிராக்டர் மற்றும் அவர் அறுவடை செய்து சேமித்து வைத்திருந்த 500 நெல் மூட்டைகள் நெற்கேவியலையும் சமூக விரோத கும்பல் தீ வைத்து முற்றிலும் எரித்தது.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ள உறவினர்களின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் கொலைக் குற்றவாளிகளை விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தார்.
ஆனால், உறவினர்கள் அதை ஏற்காமல் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை மறியல் காரணமாக திருத்தணி சாலை போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய 8 குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் விரைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.