62 வயது மூதாட்டியை கொன்ற 16 வயது சிறுவன்: திருச்சியில் அரங்கேறிய கொடூரம்
திருச்சியில் 16 வயது சிறுவன் 62 வயது மூதாட்டியை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி சந்தைபேட்டையில் 62 வயதான ஹபிபாபீவி என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார்.
இவரது கணவர் அப்துல் ரசாக் காலமானதால் அவர் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அவர் தனது வீட்டில் இரத்த வெள்ளத்தில் ஆடைகள் களைந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதனையடுத்து போலீசார் மோப்ப நாயின் உதவியோடு விசாரணையை தொடங்கினர். அப்போது மோப்ப நாய் மூதாட்டி இருந்த வீட்டின் பகுதி அருகே சுற்றி வந்தது.
அதனையடுத்து போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது சந்தேகம் அளிக்கும் வகையில் மூதாட்டி வீட்டின் அருகே 16 வயது சிறுவன் ஒருவன் திரிந்துள்ளான். அவனும் அதே பகுதியை சேர்ந்தவன் தான். அவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையின் பொது முரணாக பதில் அளித்துள்ளான். சிறுவன் முரணமாக பதில் அளித்ததால் அவரை தனியாக அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, மூதாட்டி எப்போதும் தன்னை திட்டுவதாகவும், இதனால் ஆத்திரமடைந்து மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சிறுவன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறுகின்றனர்.
கழுத்தை கயிற்றால் நெரித்தும், கருங்கற்களை கொண்டு முகத்தை சிதைத்தும் கொலை செய்ததாகவும், இருந்த 3 சவரன் நகை மற்றும் செல்போனை எடுத்து சென்றதாகவும் விசாரணையில் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
16 வயது சிறுவன் ஒருவன் 62 வயது பாலியல் கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.