ஆண் நண்பர்களோடு பேசி வந்த காதலி..தம்பியோடு சேர்ந்துக் கொன்று புதைத்த காதலன்

murder brother lover kill
By Praveen Apr 22, 2021 12:00 AM GMT
Report

புதுச்சேரியில் கல்லூரி மாணவி ஒருவர் சாக்குமூட்டையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் காதலன் தனது தம்பியுடன் சேர்ந்து மாணவியை கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி வில்லியனூர் அருகேயுள்ள பொறையூர் சுடுகாட்டில் மர்மமான முறையில் சாக்கு மூட்டை கிடப்பதாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன், காவல் ஆய்வாளர் கிருஷ்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தனர். அதில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சாக்குமூட்டையில் கட்டி வீசப்பட்டது தெரியவந்தது.

காவல் நிலையத்தில் காணாமல் போனதாக ஏதேனும் வழக்கு நிலுவையில் உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது புதுச்சேரி சந்தை புதுக்குப்பம் பகுதியை சேர்ந்த ராமன் என்பவரி மகளும் கல்லூரி மாணவியான ராஜஸ்ரீ இன்று இரவு நேரத்தில் காணவில்லை என தகவல் கிடைத்தது.

காணாமல் போன ராஜஸ்ரீ சேதராப்பட்டு பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். போலீஸார் விசாரணையில், ராஜஸ்ரீயின் காதலன் பிரதீஷ் தன் தம்பியுடன் சேர்ந்து அவரை கொலை செய்தது தெரிய வந்தது கொலை செய்யப்பட்ட ராஜஸ்ரீயும், பொறையூரைச் சேர்ந்த பிரதீஷும் காதலித்து வந்துள்ளனர்.

ராஜஸ்ரீ மற்ற ஆண் நண்பர்களுடன் பேசி வந்ததாக சந்தேகப்பட்ட பிரதீஷ் அவருடன் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் காதலன் பிரதீஷ் கடந்த செவ்வாயன்று ராஜஸ்ரீயை பொறையூர் சுடுகாட்டிற்கு வரவழைத்துள்ளார்.

அங்கும் இருவருக்குமிடையே வாக்குவாதம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பிரதீஷ், தனது தம்பி உதவியுடன் ராஜஸ்ரீயைக் கொன்று சாக்குமூட்டையில் அடைத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதனிடையே இது தொடர்பாக விசாரணை செய்து வந்த தனிப்படை போலீசாரிடம் பிரதீஷ் சிக்கியதைத் தொடர்ந்து, தலைமறைவாகியுள்ள அவனது தம்பியை தேடி வருகின்றனர்.

காதலித்த பெண்ணை தனது தம்பியுடன் சேர்ந்து காதலனே கொலை செய்து, சாக்குமூட்டையில் கட்டி சுடுகாட்டில் வீசி சென்ற சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.