விசாரணைக் கைதி உயிரிழப்பு..உதவி ஆய்வாளர் உள்பட மூவருக்கு சிறை தண்டனை

death jail 10years police accust
By Praveen Apr 27, 2021 10:18 AM GMT
Report

சிறையிலே விசாரணைக் கைதி திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் உதவி ஆய்வாளர் உள்பட மூன்று பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் மொட்டணம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது கத்தியை காட்டி அச்சுறுத்தியதாக செந்தில்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து செந்தில்குமாரையும், அவரது தம்பியையும் விசாரணைக்காக அழைத்துச் சென்ற போலீசார், அவர்கள் இருவரையும் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

கடந்த 2010ம் ஆண்டு போலீசார் தாக்கியதில் செந்தில்குமார் காவல் நிலையத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தினர். காவல் உதவி ஆய்வாளர் முத்துசாமி, தலைமை காவலர்கள் ரவிசந்திரன், பொன்ராம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு திண்டுக்கல் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

இவ்வழக்கை நீதிபதி சரவணன் விசாரணை செய்து இன்று தீர்ப்பு வழங்கினார் இதில் வடமதுரை சார்பு ஆய்வாளராக பணியாற்றிய திருமலை முத்துசாமிக்கு 11 ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் 6000 அபராதமும்.

ஏட்டுகள் ரவிச்சந்திரன் பொன்ராம் ஆகியோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 5,000 அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பை தற்போது வழங்கியுள்ளது இந்த தீர்ப்பினால் நீதிமன்ற வளாகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதில் இரண்டு வியாபாரிகள் காயங்களுடன் இறந்து தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது திண்டுக்கல் அருகே உள்ள வடமதுரை காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதில் ஒருவர் இறந்து பதினோரு ஆண்டுகளுக்குப் பின்பு தீர்ப்பு வழங்கப்பட்டது குற்றவாளிகளாக காவல்துறையினர் மீது தீர்ப்பு வழங்கப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.