35,000 கி.மீ உயரத்தில் பார்த்த அதிசயம்; பொங்கி வழிந்த லாவா - பிரம்மாண்ட வீடியோ

Viral Video
By Sumathi Dec 11, 2025 01:34 PM GMT
Report

லாவா நீரூற்றாக வானத்தை நோக்கிப் பீறிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

கிலௌவா லாவா

ஹவாயின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றான கிலௌவா விண்ணை முட்டும் அளவு கொந்தளித்துள்ளது. நூற்றுக்கணக்கான மீட்டர் உயரத்திற்கு உருகிய பாறைகளை, தீப்பிழம்பு நீரூற்றுபோல வானத்தை நோக்கி வீசியெறிந்தது.

35,000 கி.மீ உயரத்தில் பார்த்த அதிசயம்; பொங்கி வழிந்த லாவா - பிரம்மாண்ட வீடியோ | Kilaueas Fiery Spectacle Lava Satellite Captures

இதனை பூமியிலிருந்து 35,000 கிலோமீட்டர் தொலைவில் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் வானிலை கண்காணிப்பு கருவிகள் பதிவு செய்துள்ளது. டிசம்பர் 2024 முதல் நடந்த 38வது வெடிப்பு இது. தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) GOES வெஸ்ட் செயற்கைக்கோள்,

வைரல் வீடியோ 

இந்த அதிசயத்தை டைம்-லேப்ஸ் காட்சியாக வெளியிட்டபோது, விஞ்ஞானிகளே மிரண்டனர். பூமியின் ஆழத்தில், திடமான பாறையை விட அடர்த்தி குறைந்த, உருகிய வாயுக்களைக் கொண்ட மாக்மா (Magma) உருவாகிறது. இந்த மாக்மா, மிதந்து மேலே எழும்போது, அழுத்தம் குறைந்து, உள்ளிருக்கும் வாயுக்கள் விரிவடைகின்றன.

இதுதான் வெடிப்பை உண்டாக்குகிறது. கிலௌவா ஹவாய் வெப்ப மையத்தின் (Hawaiian hotspot) மேல் சரியாக அமைந்துள்ளது. பூமியின் ஆழத்தில் இருந்து தொடர்ந்து சூடான மாக்மாவை இந்த இடம் பெற்றுக் கொண்டே இருக்கிறது. இதன் விளைவாக, கிலௌவாவின் லாவா மிகவும் திரவத் தன்மை (Fluid) கொண்டதாகவும்,

சிலிக்கா குறைவாகவும் இருப்பதால், இது பெரிய வெடிப்புகளைத் தவிர்த்து, அடிக்கடி லாவாவைப் பீறிடும் வெடிப்புகளை நிகழ்த்துகிறது. தற்போது GOES வெஸ்ட் போன்ற நவீன செயற்கைக்கோள்கள் மூலம், லாவா ஓட்டம் மற்றும் வாயு வெளியேற்றங்களை விஞ்ஞானிகள் சில நிமிடங்களுக்குள் கண்காணித்து, எச்சரிக்கைகளை வழங்க முடிவது குறிப்பிடத்தக்கது.