அதிரடி வீரர் பொல்லார்ட் ஸ்பின் பவுலிங் போட்டு பாத்துருக்கீங்களா? - இதோ வீடியோ
வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கைரன் பொல்லார்ட் பந்து வீசும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கைரன் பொல்லார்ட் தற்போது வெஸ்ட் இண்டீஸில் உள்ள ட்ரினிடாடில் நடைபெற்று வரும் பத்து ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ளார்.
பல வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்றுள்ள நிலையில் லீக் போட்டி ஒன்றின் போது பொல்லார்ட் ஸ்பின் பவுலிங் செய்துள்ளார். இவரது பந்துவீச்சில் விக்கெட் ஒன்றும் விழுந்துள்ளது. இதனைப் பார்த்து ஆச்சரியப்பட்ட ரசிகர்கள் அதன் வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
. @KieronPollard55 proves he can be lethal, even while bowling off-spin! ?
— FanCode (@FanCode) February 27, 2022
? Watch the best moments from this Dream11 Trinidad T10 Blast match on #FanCode ? https://t.co/c8dKvIy6GE pic.twitter.com/rLxI0OYTpu