கடற்கரையில் கிடந்த அரிய சிப்பிகளை சேகரித்த குழந்தைகள்- தாய்க்கு தேடி வந்த தண்டனை!
அரிய வகை உயிரினங்களான கடல் மட்டிகளை சேகரிக்க மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அறிய சிப்பிகள்
அமெரிக்க மாகாணத்தில் உள்ள கலிபோர்னியாவை சேர்ந்த சார்லோட் ரஸ் என்பவர் தனது குழந்தைகளுடன் பிஸ்மோ என்ற கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு விளையாடி கொண்டு இருந்த குழந்தைகள் கண்ணில் சிப்பி போல தோற்றமளிக்கும் இறால் வகையான கடல் மட்டிகளை பார்த்துள்ளனர்.
பொதுவாக கடற்கரைக்கு சென்றால் சிப்பிகளை சேகரிக்கும் பழக்கம் பலருக்கு இருக்கும். அந்த வகையில் தான் இந்த குழந்தைகளும் அவற்றை சிப்பி என நினைத்து சேகரிக்க தொடங்கினர். அப்படி அவர்கள் சுமார் 73 கடல் மட்டிகளை சேகரித்து வீட்டுக்கு எடுத்து சென்றனர்.
தாய்க்கு தண்டனை
அப்போது வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்த வழியில் மீன்வளத்துறையினர் சோதனை நடத்தினர். அவர்களிடத்தில் இருந்த அரிய வகை உயிரினங்களான கடல் மட்டிகளை சேகரித்த குற்றத்திற்காக, 88 ஆயிரம் அமெரிக்க டாலர்களை குழந்தைகளின் தாய்க்கு (இந்திய மதிப்பில் ரூ.73 லட்சம்) அபராதமாக விதித்தனர்.
ஏனென்றால், பிஸ்மோ கடற்கரை, மட்டிகளின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இங்கு மீனவர்களைத் தவிர வேறு யாரும் மட்டிகளை சேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் என்றாலும், ஒரு நாளைக்கு 10 மட்டிகளுக்கு மேல் சேகரிக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சார்லோட் ரஸ் கூறும்போது, சிப்பி என்று நினைத்தே குழந்தைகள் மட்டிகளை சேகரித்தனர். கோர்ட்டுக்கு சென்று மன்னிப்பு கேட்டதால், அபராதம் 500 டாலராக (ரூ 41 ஆயிரம்) குறைக்கப்பட்டது என்றார்.