குறைந்த விலைக்கு கிட்னி வாங்கி விற்பனை - என்ன கொடுமை இது?
ஏழைகளை ஏமாற்றி அவர்களது கிட்னியை வாங்கி அதை பல கோடிகளுக்கு வெளிநாட்டில் விற்பனை செய்து வரும் ஆப்பிரிக்க நாட்டு வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்து வந்த ஒரு ஆப்பிரிக்க நாட்டவர், 2007 ஆம் ஆண்டில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் இளங்கலைப் படிப்பதற்காக இந்தியா வந்திருக்கிறார்.
அவரது விசா 2010-இல் முடிந்த போதிலும் ஆப்பிரிக்காவுக்குத் திரும்பி போகவில்லை. காலாவதியான விசா இருந்தபோதிலும் கிரேகோயர் பெங்களூருவில் வசித்து வந்தார்.
பிறகு அர்பாஸ் ராணா என்ற 25 வயது நபருடன் தொடர்பு கொண்டார். பின்னர் இருவரும் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்யத் தொடங்கினர்.
அதன் பிறகு பிரபல மருத்துவமனைகளான மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி, அப்பல்லோ, ஃபோர்டிஸ், லிலாவதி மற்றும் மணிப்பால் மருத்துவமனை போன்ற வலைத்தளங்களை போலியாக உருவாக்கினர்.
இந்த போலி வலைத்தளங்கள் மூலமாக பொதுமக்களை ஏமாற்றி அவர்களின் கிட்னிகளை ரூ. 4 கோடி முதல் ரூ .7 கோடிக்கு விற்றுள்ளார். இவர்கள் இருவருக்கும் கொள்ளையடித்த பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கிரேகோயர், ராணாவையே ஏமாற்றி விற்பனை செய்துவந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ராணா, கிரேகோயர் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட போலீசார், கிரேகோயரை
அதிரடியாக கைது செய்தனர்.