செக்யூரிட்டிக்கு கல்தா..ரஜினி வீட்டிற்குள் நுழைய முயன்ற சிறுமி...பரபரப்பான போயஸ் கார்டன்

Rajinikanth Tamil Cinema Jailer
By Karthick Aug 08, 2023 07:59 AM GMT
Report

நடிகர் ரஜினியின் வீட்டிற்குள் நேற்றிரவு பெண் ஒருவர் நுழைய முயன்றதால் போயஸ் கார்டனில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் ரஜினி நடிப்பில் தற்போது ஜெயிலர் படம் ரிலீஸிற்காக தயாராகி உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையில், பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் மீது எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. படம் வருகின்ற 10-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அவர் தற்போது இமயமலை சென்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.

kid-tries-to-sneak-in-rajinis-house

இந்நிலையில், தான் நேற்றிரவு சிறுமி ஒருவர் ரஜினியின் வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் ரஜினியின் வீட்டிற்கு வந்த அந்த சிறுமி அங்கிருந்த செக்யூரிட்டியிடம் ரஜினியை தான் சந்திக்கவேண்டும் என கேட்டுள்ளார்.

நுழைய முயன்ற பெண்

அதற்கு மறுப்பு தெரிவித்த செக்யூரிட்டி, அவர் யார் எங்கிருந்து வருகின்றார் என விசாரணை மேற்கொண்டுள்ளார். ஆனால், தன்னை பற்றி எந்த விவரத்தையுமே சொல்லாத சிறுமி, ரஜினி சாரை இப்பவே பார்த்தாக வேண்டும் என அடம்பிடித்துள்ளார். இதன் காரணமாக செக்யூரிட்டி உடனடியாக தேனாம்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினரும், சிறுமியை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

[

சேலத்தை சேர்ந்த சிறுமி

விசாரணையில் அந்த சிறுமி, அந்த பெண், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ராமர் என்பவரின் மகள் தெரிய வந்ததுள்ளது. ரஜினியை காணும் ஆர்வத்தில் அந்த சிறுமி தனியாக வீட்டில் பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு, நேற்று காலை சேலத்தில் இருந்து சென்னைக்கு பஸ் ஏறி, நேரே போயஸ் கார்டனுக்கு வந்துள்ளார்.

kid-tries-to-sneak-in-rajinis-house

பிறகு சென்னையில் இருக்கும் சிறுமியின் உறவினர் ஒருவருக்கு தகவல் அளிக்கப்பட்டு சிறுமி அவரிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சிறுமியின் இந்த செயலால் போயஸ் கார்டனில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.