'who சொல்றியா மாமா..who who சொல்றியா மாமா’ - வீட்டுப்பாடம் கற்பிக்கும்போது குழந்தை செய்த குறும்புத்தனமான செயல்
சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஓ சொல்ரியா மாமா’ பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று பட்டித்தொட்டி எங்கும் பட்டையைக்கிளப்பி வருகிறது.
டி.எஸ்.பி. இசையமைதிருக்கும் புஷ்பா படத்தில் இடம்பெற்றிருக்கும் எல்லா பாடல்களும் நல்ல ஹிட் அடித்திருக்கும் நிலையில்,
நடிகை ஆண்ட்ரியா குரலில் அமைந்திருக்கும் ‘ஓ சொல்ரியா மாமா’ பாடல் படத்திலுள்ள மற்ற பாடல்களைக்காட்டிலும் அமோக வரவேற்பை பெற்று ட்ரெண்டிங்கில் உள்ளது.
இந்நிலையில் குழந்தை ஒருவருக்கு அவரது தாய் வீட்டுப்பாடம் கற்பிக்கும்போது ஆங்கில வார்த்தையான who (ஹூ) என்ற வார்த்தையை வாசிக்க பயிற்சி கொடுக்கிறார்.
உடனே அந்த குழந்தை who-விற்கு பதிலாக ‘ஓ சொல்ரியா மாமா’ பாடலின் தெலுங்கு வெர்ஷனான ‘ஓ அண்ட்டாவா மாவா’ பாடலை பாடுகிறார்.
who-வை (ஹூ) ஓ என மாற்றி பாடியதை திருத்தும் தாய், அது ஓ இல்லை who (ஹூ) என கூரியதை தொடர்ந்து அந்த குழந்தை இப்போது ‘who (ஹூ) அண்ட்டாவா மாவா’ என பாடியது.
தற்போது குட்டி குழந்தையின் இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.