உதட்டில் புன்னகை புதைத்தோம் ..உயிரை உடம்புக்குள் புதைத்தோம் :காபூல் விமான நிலையத்தில் காத்திருக்கும் இந்தியப் பெண்ணின் வேதனைப் பகிர்வு!

waiting indianwoman kabulairport
By Irumporai Aug 21, 2021 06:38 PM GMT
Report

விடை கொடு எங்கள் நாடே ..

கடல் வாசல் தெளிக்கும் வீடே ..

பனை மர காடே, பறவைகள் கூடே மறுமுறை ஒரு முறை பார்போமா?..

  கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இலங்கை தமிழர்களின் துயரத்தை கூறும் பாடல் இது, சொந்த நாட்டை விட்டு அகதியாக செல்லும் அப்பாவி மக்களின் நிலையினை இந்த பாடல் கூறியிருக்கும்.

தற்போது அதே நிலையினை  ஆப்கானில் உள்ள அப்பாவி குடிமக்கள் அனுபவித்து வருகின்றனர், அமெரிக்கா படை தனது வேலை முடிந்ததும் கிளம்பிவிட்டது ஆப்கான் அதிபரோ ஆபத்தான நிலையில் நாட்டினை தவிக்கவிட்டு அமீரகத்தில் தஞ்சமடைந்து விட்டார், ஆனால் கொடுமைகளையும் வேதனைகளையும் அனுபவித்து வருவது அங்கு உள்ள அப்பாவி குடி மக்கள் தான்.

இந்த நிலையில்ஆப்கானில் உள்ள காபூல் நகரில் இந்திய விமானத்துக்காக காத்திருக்கும் ஓர் இளம் தாயின் அவலநிலையை டெல்லியில் உள்ள அவரது தாயார் தனியார் (ndtv) தொலைக்காட்சியில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது டெல்லியில் உள்ள எங்களது பெண்ணை ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவருக்கு திருமணம் செய்துகொடுத்தோம். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

தற்போது ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதால் அங்கிருந்து முதலில் எனது மகளும், பேரனும் மட்டும் வெளியேறுமாறு மருமகன் கூறியுள்ளார் ஆகவே எனது மகளும் பேரனும் காபூல் விமானநிலையத்துக்கு வந்தனர் கடந்த இரண்டு நாட்களாக அவர் அருகிலிருந்த திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.

அப்போது, இந்திய விமானம் வந்துள்ளதாக கூறப்பட்டதால் அனைவரும் ஒரு பேருந்தில் ஏறி சென்றனர் ஆனால் விமான நிலையம் வரும் வழியில் தலிபான்கள் அவர்களைத் தடுத்தி நிறுத்தியதால் எனது மகள் உட்பட 150 பேர் தலிபான்கள் விசாரணை வளையத்துக்குள் சென்றுவிட்டனர்.

பின்னர் அவர்களை விமானநிலையம் செல்ல தலிபான்கள் அனுமதித்தனர். அதனால் அவர்கள் விமானநிலையம் வந்தனர். ஆனால் அதற்குள் 80 பேருடன் விமானம் சென்றுவிட்டது.

இப்போது எனது மகள் மீண்டும் காத்திருக்கிறார். அங்கே அவளுக்கு தண்ணீர் கூட கிடைக்கவில்லை. எனது பேரனுக்கு பால் கிடைக்கவில்லை என்று வேதனையைப் பகிர்ந்துள்ளார்.

காபூல் நகரம் முழுவதும் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் விமான நிலையம் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் 80 இந்தியர்களுடன் ஆப்கனிலிருந்து நேற்று (21.9.2021) புறப்பட்ட இந்திய விமானம் இன்று(22.9.2021) தலைநகர் டெல்லி வந்து சேரும் என கூறப்படுகிறது.