‘தப்பிச்சோம்டா சாமி’ - கோர விபத்திலிருந்து சிறுவன் நூலிழையில் உயிர் தப்பிக்கும் காட்சிகள் வைரல்

keralaaccident kidcheatsdeath escapesfromaccident
By Swetha Subash Mar 24, 2022 12:27 PM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

சிறுவன் ஒருவன் சாலையை கடக்கும்போது கோர விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிபறம்பு பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது மிதிவண்டியில் மண் சாலையை வேகமாக கடக்க முயல்கிறான்.

அப்போது எதிர்பாராத விதமாக அவ்வழியே சாலையில் வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதால், நிலைதடுமாறி விழுந்து உருண்டுச்சென்று சாலையின் மறுபுறம் வீசப்படுகிறான்.

இந்த விபத்தில் சிக்கி சாலையின் நடுவில் கிடந்த அவனின் மிதிவண்டியின் மீது நொடிப்பொழுதில் சாலையில் சீறிபாய்ந்து வந்த பேருந்து ஏறியதால் மிதிவண்டி நொறுங்கிப்போனது.

பைக் மீது மோதி சிறுவன் சாலையின் மறுபுறம் வீசப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளான். இந்த நிகழ்வின் பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி காண்போரை உறையவைத்துள்ளது.