"மக்கள் பாஜக-வுடன் இருப்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன" - 4 மாநில வெற்றி குறித்து குஷ்பு ட்வீட்

bjpleads4states stateassemblyelection congresslost khushbutweets
By Swetha Subash Mar 10, 2022 11:28 AM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலத்திற்கான தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 20-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது.

அதேபோல், உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது.

"மக்கள் பாஜக-வுடன் இருப்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன" - 4 மாநில வெற்றி குறித்து குஷ்பு ட்வீட் | Khushbu Tweets Over Bjp Win In 4 State Elections

இந்நிலையில், 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை தொடங்கி தொடர்ந்து எண்ணப்பட்டும் வரும் நிலையில், 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள குஷ்பு,

“மக்கள் பா.ஜ.க.வுடன் இருப்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. கட்சி மீதும் நமது பிரதமர் நரேந்திர மோடி மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை எதுவும் தடுக்க முடியாது.

இந்திய தேசிய காங்கிரஸ் மேலும் சிதைந்துவிட்டது. மக்களுக்காக பாடுபடுபவர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவாக நிற்பவர்களுக்கும் மக்கள் வாக்களிப்பார்கள்.

பா.ஜ.க.வில் உள்ள நாங்கள் செய்கிறோம். நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். வெற்றியை கொடுத்த மக்களுக்கு நன்றி, ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்தனர்.

கடுமையாக உழைத்த அனைத்து தன்னார்வலர்களும், செய்தி, சித்தாந்தம், ஒவ்வொரு திட்டத்தையும் மக்களிடம் கொண்டு சேர்த்தனர். நரேந்திர மோடி ஜி, நீங்கள் இல்லாமல் இந்த வெற்றி கிடைத்திருக்காது” என தெரிவித்துள்ளார்.