ஓபிஎஸ் – குஷ்பு ஒன்றாக விமான பயணம்- வைரலாகும் புகைப்படம்

heroine admk ops
By Jon Jan 30, 2021 11:57 AM GMT
Report

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பாஜக வின் முக்கிய உறுப்பினரும் நடிகையுமான குஷ்புவும் விமானத்தில் அருகருகே அமர்ந்து பயணம் செய்துள்ளனர். இந்த புகைப்படத்தினை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள குஷ்பு, மரியாதைக்குரிய துணைமுதல்வருடன் பயணத்த பயணம் மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மதுரை அருகே திருமங்கலம் பகுதியில் அமைச்சர் உதயகுமார் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கட்டப்பட்ட கோயில் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதற்காக ஓ.பன்னீர்செல்வம் சென்ற விமானத்தில், மதுரை பயணத்தின்போது அதே விமானத்தில் பாஜக பிரமுகர் குஷ்புவும் பயணம் செய்தார்.

மதுரை வந்த பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவின் நிகழ்ச்சிக்காக குஷ்பு மதுரை சென்றபோது இருவரும் அருகருகே அமர்ந்து சென்றனர்.