மீண்டும் கட்சி தாவுகிறாரா குஷ்பூ - அவரே வெளியிட்ட விளக்கம்

admk dmk bjp khushbusundar
By Petchi Avudaiappan Sep 06, 2021 05:20 PM GMT
Report

நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பூவிடம் திமுக கட்சிக்கு தாவ உள்ளீர்களா? என இணையவாசி ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர்கள் தினமான நேற்று பிரபலங்கள் பலர் தங்களின் குருக்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்தார்கள். அந்த வகையில் நடிகை குஷ்பு கலைஞர் கருணாநிதியை தன் ஆசிரியர் என்று கூறி பெருமையாக ட்வீட் செய்திருந்தார்.

இது வைரலான நிலையில் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த ட்வீட்டை பார்த்தவர்கள் குஷ்பு மீண்டும் திமுகவுக்கு செல்லப் போகிறாரா என்ற கேள்வியை எழுப்ப தொடங்கி விட்டனர். இதில் ஒருபடி மேலே போய் அதிமுக ஐடி பிரிவை சேர்ந்த அய்யப்பன் என்பவர்திமுகவுக்கு தயாராக இருக்கீங்க போல.இதுலாம் ஒரு பொழப்பா அக்கா என்று கமெண்ட் செய்தார்.

இதனை குறிப்பிட்டு பதிலளித்த குஷ்பு கடவுளே.. அம்மா உங்களுக்கு குரு மரியாதை சொல்லி கொடுக்கல. பாவம் நீங்க. இது தான் கலைஞருக்கும், மற்றவர்களுக்கும் இடையேயான வித்தியாசம். உங்களுக்கு என்ன ஒரு சின்ன புத்தி. குருவை மதிப்பது என்றால் நீங்கள் நன்று கற்றிருக்கிறீர்கள் என்று அர்த்தம். அது உங்களுக்கு தெரியாது என தெரிவித்துள்ளார். இதன்மூலம் குஷ்பு கட்சி மாறுகிறாரா என்ற கேள்விகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.