விஜய் மனதில் பாஜகதான் உள்ளது - குஷ்பூ சொல்லும் காரணம்

Vijay Khushbu BJP Puducherry Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Apr 05, 2026 12:28 PM GMT
Report

விஜய் மனதில் பாஜகதான் உள்ளது என குஷ்பூ பேசியுள்ளார்.

குஷ்பூ பேட்டி

தமிழ்நாடு பாஜக துணைத்தலைவர் குஷ்பூ புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

விஜய் மனதில் பாஜகதான் உள்ளது - குஷ்பூ சொல்லும் காரணம் | Khushbu Says Bjp In Tvk Vijay Heart

கடந்த முறை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட நீங்கள் இந்த முறை ஏன் போட்டியிடவில்லை என எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஆயிரம் விளக்கு தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என முடிவு செய்திருந்தால், இப்போது உங்களின் முன்பு புதுச்சேரியில் இருந்திருக்க முடியாது. 

சுந்தர். சி சொத்து விபரங்கள்

சுந்தர். சி சொத்து விபரங்கள்

என் கணவர் மதுரையில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் நான் சாதாரண கார்யகர்தாவாக பயணிக்கவே விரும்பினேன். நான் மதுரையிலும் இருக்க வேண்டும். இப்போது கேரளா சென்று வந்துள்ளேன். புதுச்சேரி, காரைக்கால், கேரளா, தமிழ்நாடு முழுவதும் பயணிக்க வேண்டும்" என கூறினார்.

விஜய் மனதில் பாஜக

அதைத்தொடர்ந்து, நேற்று புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தவெக தலைவர் விஜய் பாஜகவை குழம்பியிருக்கும் கூட்டணி என பேசியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் நேற்று தான் வந்திருக்கார் அவரை விட்டுவிடலாம்.

அவர் வாக்கு சேகரிக்க சென்ற போது மணவெளி தொகுதியில் அவரின் கட்சி வேட்பாளர் பெயரை சொல்லாமல் எங்கள் வேட்பாளர் செல்வத்தின் பெயரை கூறியுள்ளார். 

2 தொகுதிகளிலும் கூடுதல் பிராமண பத்திரம் தாக்கல் செய்த விஜய் - அதிகரித்த சொத்து மதிப்பு

2 தொகுதிகளிலும் கூடுதல் பிராமண பத்திரம் தாக்கல் செய்த விஜய் - அதிகரித்த சொத்து மதிப்பு

இதில் இருந்தே விஜய்யின் மனதில் பாஜக தான் இருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது. அதுவரைக்கும் எங்களுக்கு சந்தோசம்" என தெரிவித்துள்ளார்.