பிரபல நடிகர் கடும் மாரடைப்பால் மரணம்: பேரதிர்ச்சியில் குஷ்பு

friend dearest soon
By Jon Feb 10, 2021 01:50 AM GMT
Report

பிரபல நடிகர் ராஜீவ் கபூர் மாரடைப்பால் தனது 58வது வயதில் காலமானார். ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் ராஜீவ் கபூர். இவர் இன்று கடுமையான மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ராஜீவ் கபூர் பிரபல திரையுலக ஜாம்பவான்களான ரிஷி கபூர் மற்றும் ரந்தீர் கபூரின் சகோதரர் ஆவார்.

ராஜீவ் கபூரின் திடீர் மரணம் திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தம்பியின் மரணம் குறித்து ரந்தீர் கபூர் கூறியதாவது, என் தம்பி ராஜீவ் இறந்துவிட்டார். மருத்துவர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை. நான் மருத்துவமனையில் இருக்கிறேன்.

அவரின் உடலை வாங்கிச் செல்ல காத்துக் கொண்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார். அவர் மரணத்துக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகை குஷ்புவின் டுவிட்டர் பதிவில், நான் அதிர்ச்சியில் உள்ளேன். நீங்கள் இவ்வளவு சீக்கிரம் போக கூடாது , நான் தன்னம்பிக்கையுடன் பேசுவதற்கு நீங்கள் தான் காரணம்.

உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் என் அன்பான நண்பரே என பதிவிட்டுள்ளார்.