கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் நடிகை குஷ்பூ

corona sundar khushbu
By Jon Mar 04, 2021 01:35 PM GMT
Report

பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான நடிகை குஷ்பூ இன்று அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். ஜனவரி 16ம் தேதி முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது, முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடிகை குஷ்பு இன்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார். இதுகுறித்து புகைப்படத்தை பகிர்ந்துள்ள குஷ்பூ, என் குடும்பத்தை கவனித்துக்கொள்கிறேன், அதோடு தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களை சந்திக்கிறேன்.

மற்றவர்களை கவனித்துக்கொள்வதற்கு நான் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார்.