உதயநிதியை எதிர்த்து போட்டியிடும் குஷ்பு?
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்பு அந்த தொகுதியில் போட்டியிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 1977ம் ஆண்டு முதல் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக-வே வெற்றி பெற்று வருகிறது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மூன்று முறையும், காங்கிரஸ் வேட்பாளரான ஜீனத் சர்புதீனும் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இந்த தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார், ஏற்கனவே தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்புவும் இதே தொகுதியில் களமிறக்கப்படலாம்.
தற்போது வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க தொடங்கியுள்ள குஷ்பு, நான் போட்டியிடும் தொகுதியை கட்சி தான் முடிவு செய்யும் என்றும், உதயநிதி போட்டியிட்டால் சந்தோஷமே எனவும் தெரிவித்துள்ளார்.