‘’ எங்களுக்கு நியாயம் வேண்டும் ‘’ - சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட குஷ்பூ மற்றும் பொன்ராதாகிருஷ்ணன்

modi car khushboo ponradhakrishnan tarna
By Irumporai Jan 07, 2022 07:39 AM GMT
Report

காங்கிரஸ் கட்சியை கண்டித்து, மெரினாவில் உள்ள காந்தி சிலை வரை செல்ல காவல்துறையினர் அனுமதி வழங்காததால், குஷ்பூ, பொன்ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் ஆகியோர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

பிரதமர் நரேந்திரமோடியின் பஞ்சாப் பயணத்தின் போது, பாதுகாப்பு குறைபாடு காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியை கண்டித்து, பட்டினம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘’ எங்களுக்கு நியாயம் வேண்டும் ‘’   - சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட குஷ்பூ மற்றும் பொன்ராதாகிருஷ்ணன் | Khushboo And Ponradhakrishnan The Road Tarna

இதனையடுத்து மெரினாவில் உள்ள காந்தி சிலை வரை செல்ல அனுமதிக்கக் கோரி பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

காந்தி சிலை வரை செல்ல அனுமதித்தால் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை வரும், மேலும் கொரோனா காலகட்டம் என்பதால் அனுமதிக்க முடியாது என கூறி காவல் துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் அனுமதி வழங்காததால், குஷ்பூ, பொன்ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் ஆகியோர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.