கீழே விழுந்த சச்சின்.. பதறிப்போன அக்தர் - டென்ஷன் ஆன யுவராஜ் சிங்
சச்சின் டெண்டுல்கரை தூக்க முயற்சி செய்து அவர் கீழே விழுந்த சம்பவத்தை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் நினைவு கூர்ந்துள்ளார்.
கடந்த 2007 ஆம் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டது. அப்போது நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இரு அணி வீரர்களும் கலந்து கொண்டனர்.
அப்போது அக்தர் விளையாடும் விதமாக சச்சின் டெண்டுல்கரை தூக்க முயற்சி செய்த பொழுது, எதிர்பாராத விதமாக சச்சின் கீழே விழுந்தார்.உடனிருந்த ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் என்ன செய்கிறாய் என்று என்னிடம் கேட்க தனக்கு பதற்றம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
அந்த நொடி ‘நாம் அவ்வளவு தான். இந்திய ரசிகர்கள் நம்மை சும்மா விட மாட்டார்கள். சச்சினுக்கு காயம் ஏற்பட்டால் இந்தியாவுக்கு விசா கூட வழங்க மாட்டார்கள்’ என நினைத்ததாக அக்தர் தெரிவித்துள்ளார்.
ஆனால் நல்லவேளையாக அப்படி ஏதும் நிகழவில்லை என்றும், அதற்கு பதிலடியாக சச்சின் போட்டிகளின் போது பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை விளாசி தள்ளினார் என்றும் கூறியுள்ளார். அவரின் பேட்டிங்கை பார்த்த நான், பேசாமல் அடிபட்டு இருந்திருக்கலாம் என நினைத்ததாக நகைச்சுவையாக அக்தர் தெரிவித்துள்ளார்.