தலைவா யூ ஆர் கிரேட் - சூர்ய குமார் யாதவிற்கு தலைவணங்கிய கோலி

Virat Kohli Indian Cricket Team Hong Kong
By Irumporai Sep 01, 2022 04:24 AM GMT
Report

நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பையில் ஹாங்காங் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. துபாயில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

சூப்பர் 4 க்கு முன்னேறிய இந்திய அணி 

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் சூர்யகுமார் யாதவ் 68 ரன்களுடனும், விராட் கோலி 59 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர்.]

தலைவா யூ ஆர் கிரேட்   - சூர்ய குமார் யாதவிற்கு தலைவணங்கிய கோலி | Kholi Vs Surya Kumar Yadav Hongkong

அடுத்து களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. குறிப்பாக நேற்றைய போட்டியின் போது அவிராட் கோலியும் சூர்யகுமார் யாதவும் ஹாங்காங் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

அதிரடி காட்டிய சூர்ய குமார்

சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளை எதிர்க்கொண்டு 6 பவுண்டரிகள், 6 சிக்சர்களை விளாசி 68 ரன்கள் குவித்தார். மறுமுனையில் நிலையான ஆட்டத்தை ஆடிய விராட் கோலி 44 பந்துகளில் ஒரு பவுண்டரி 3 சிக்சர்களை அடித்து 59 ரன்களை குவித்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை குவித்தது .

வெற்றிகரமான ஜோடியாக ஜொலித்த விராட் கோலி - சூர்யகுமார் இடையே கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த மோதலை யாராலும் மறந்திருக்க முடியாது. மும்பை இந்தியன்ஸ் - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவ் 79 ரன்கள் விளாசினார்.

வைரலாகும் வீடியோ

அப்போது அவரை நோக்கி முறைத்துக்கொண்டே கோலி செல்ல, சூர்யகுமார் யாதவும் தயக்கமின்றி அவரை நோக்கி கோபமாக சென்றார். ஆனால் நேற்றைய போட்டியின் போது சூர்யமுமார் யாதவின் சிற்ப்பான ஆட்டத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக.

விராட் கோலி தலை வணங்கினார் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது