அப்பாவை பத்தி பேசுறதுக்கு முன்னாடி இதெல்லாம் யோசிச்சி பாருங்க...கதீஜா ரகுமான் ட்வீட்..!!
மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி பெரும் எதிர்ப்புகளை பெற்று வரும் சூழலில், இதில் பலமாக குற்றம்சாட்டப்படும் இசைப்புயல் ஏஆர் ரகுமானுக்கு ஆதரவாக அவரது மகள் கதீஜா கருத்து தெரிவித்துள்ளார்.
மறக்குமா நெஞ்சம்
மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி சென்னை பனையூரில், இசைப்புயல் ஏஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. இதன் 5000 ரூபாய்யில் துவங்கி 20 ஆயிரம், 50 ஆயிரம்வரை டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன.
குறிப்பட்ட அளவை விட அதிகப்படியான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாலும், சரிவர நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்படாத காரணத்தினாலும் இதற்கு வருகை தந்த பலரும் பல இன்னல்களை சந்தித்தனர். கூட்டநெரிசல், பாலியல் துன்புறுத்தல்கள், நீண்ட நேரமாக காத்திருந்தும் நிகழ்ச்சி அரங்கிற்குள் செல்ல முடியாமல் போனது என பல வகையிலும் இது குறித்து ஏமாற்றமடைந்த, பாதிக்கப்பட்ட ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை இணையத்தளத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
கதீஜா ரகுமான் ட்வீட்
குறிப்பாக இதில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான ACTC தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை விட இசைப்புயல் ஏஆர் ரகுமான் கடுமையான விமர்சனங்களை பெற்று வருகின்றார். பலரும் அவரை அவதூறாக பேசி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், தந்தை ரகுமானுக்கு ஆதரவாக அவரது மகளும் விரைவில் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ள கதீஜா ரகுமான் சமூகவலைத்தளத்தில் கருத்தை பதிவிட்டுள்ளார்.
??? pic.twitter.com/b4QPvMCXWf
— Khatija Rahman (@RahmanKhatija) September 11, 2023
2015 பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் 2016 ஆம் ஆண்டு சென்னை மதுரை கோவை மாவட்டங்களில் "நெஞ்சே எழு" என்ற இசை நிகழ்ச்சி, கேரள மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது 2018 ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு உதவியவர், திரைத்துறையில் ஏழ்மை நிலையில் உள்ள லைட் மேன்களுக்கு உதவும் நோக்கில் இலவசமாக இசை நிகழ்ச்சி நடத்தியவர் போன்ற ஏஆர் ரகுமானின் செய்லகளை குறிப்பிட்ட கதீஜா, அவர் குறித்து அவதூறாக பேசும் முன் இதனையெல்லாம் யோசித்து பேசுங்கள் என பதிவிட்டுள்ளார்.