Power Full People Come From Powerful Places :கேஜிஎப் 2 டீசர் சாதனைக்கு ஒரு டீசர்!
Power Full People Come From Powerful Places கேஜிப் படத்தின் இந்த வசனத்தை சினிமா ரசிகர்களால் மறந்துவிடமுடியாது.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிக்கும் கேஜிஎப் 2 படத்தின் டீசர் ஜனவரி மாதம் வெளியானது. இந்திய சினிமாவில் இதுவரை வெளிவந்த டீசர்களிலேயே சில பல முதன்மை சாதனைகளை அந்த டீசர் படைத்தது.
தற்போது 200 மில்லியன் பார்வைகளை யு டியூபில் கடந்துள்ளது கேஜிஎப் 2 இந்த நிலையில் அந்த 200 மில்லியன் சாதனையைக் கொண்டாடும் விதத்தில் டீசருக்கே ஒரு டீசரை வெளியிட்டுள்ளார்கள். ராக்கிபாய் அவரது ஆர்மிகள் 200 மில்லியன்' என்ற தலைப்பில் டீசரை வெளியிட்டுள்ளார்கள்.
அதுவும் 60லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது, இதன் மூலம் கேஜிஎப் 2' படம் மீது ரசிகர்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது.
இந்திய சினிமாவில் அடுத்து பெரிய வசூல் சாதனையைப் படைக்க உள்ள படங்களுள் இந்தப் படத்தையும் குறிப்பிடுகிறார்கள். விரைவில் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.