முடிவை மாற்றிய கேஜிஎஃப் -2... இயக்குனர் போட்ட டிவீட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி
கேஜிஎஃப் -2 படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'கேஜிஎஃப்' முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது 'கேஜிஎஃப் 2' இரண்டாம் பாகத்தை இயக்குநர் பிரஷாந்த் நீல் எடுத்து முடித்துள்ளார் .
ஜூலை 16 ஆம் தேதி படம் உலகம் முழுக்க வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது .
ஆனால் கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா என பல மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதாலும், இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், படம் வெளியாகுமா? வெளியாகாதா? என்று எதிர்பார்ப்புகள் கிளம்பின.
இந்த நிலையில், புதிய வெளியீட்டு தேதி விரைவில் தெரிவிக்கப்படும் என்று இயக்குநர் பிரஷாந்த் நீல் அறிவித்திருக்கிறார்.
அவர், இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "தியேட்டர்களில் கேங்ஸ்டர்கள் நிறைந்திருக்கும்போதுதான் மான்ஸ்டர் வருவார். அவர் வரும் புதிய தேதியை விரைவில் அறிவிப்போம்" என்று அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறார்.