மாஸ்ஸாக வெளியான ‘கேஜிஎஃப் 2’ புதிய போஸ்டர் - ரசிகர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி
நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ’கேஜிஎஃப் 2’ படத்தின் போஸ்டரையும், சஞ்சய் தத்தின் கதாபாத்திரப் பெயரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ’கேஜிஎஃப்’ படத்தின் 2 ஆம் பாகம் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ளது. கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் படம் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேஜிஎஃப் 2’ டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதனிடையே இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள சஞ்சய் தத் இன்று தனது 62-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இதனை முன்னிட்டு இயக்குநர் பிரஷாந்த் நீல் தனது ட்விட்டர் பக்கத்தில், ”போர் முன்னேற்றத்துக்கானது, கழுகுகள் கூட என்னுடன் உடன்படும்” என்ற வாசகத்தை வெளியிட்டு சஞ்சய் தத், அதீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதை #Adheera ஹேஷ்டேக்குடன் புதிய போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார்.
இதனால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.