கேஜிஎஃப் ராக்கி பாயின் அம்மா சன் டிவி சீரியல் நடிகையாம் - உங்களுக்கு தெரியுமா?

By Petchi Avudaiappan Apr 23, 2022 09:29 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

கேஜிஎஃப் படத்தில் அம்மா கேரக்டரில் நடித்துள்ள நடிகை குறித்து வெளியான தகவல் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தென்னந்திய திரையுலகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே கொண்டாடப்பட்டு வரும் படமாக கேஜிஎஃப் முதல் மற்றும் 2 ஆம் பாகம் உள்ளது. இந்த படத்தில் ஹீரோ யாஷின் அம்மாவாக நடித்தவரை தவிர்க்க முடியாது. அந்த அளவுக்கு மாஸ் சீன்கள், பவர் ஃபுல்லான வசனம் ஆகியவற்றை கடந்து இவரது கேரக்டர் படத்தின் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

படத்தில் ராக்கி பாயின் அம்மா பாத்திரத்தில் நடித்த நடிகை,  ஹீரோ யாஷை விட இளையவர் என்றால் நம்ப முடிகிறதா? .  இவருடைய பெயர் அர்ச்சனா ஜோய்ஸ் ஆகும். 27 வயதாகும் இவர் சுப்புலட்சுமி என்ற சன் டிவி சீரியலில் நடித்துள்ளார். ஆனால்  சில காரணங்களுக்காக அந்த சீரியல் இதுவரை ஒளிபரப்பாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு இளமையாக இருக்கும் அர்ச்சனா ஹீரோயினாக நடிக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.