வெளியானது “கே.ஜி.எஃப் - சாப்டர் 2” ட்ரைலர் - இணையத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள்

KGF2trailer actoryash rockybhai sanjaydutt
By Swetha Subash Mar 27, 2022 01:37 PM GMT
Report

வெளியானது “கே.ஜி.எஃப்- சாப்டர் 2” படத்தின் ட்ரைலர்

பிரசாந்த் நீல் இயக்கத்தில், கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப்'.

இந்தப் படத்திற்கு இந்திய அளவில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘கே.ஜி.எஃப்.: சாப்டர் 2’ என்ற பெயரில் தயாராகியுள்ளது.

படத்தின் இரண்டாம் பாகத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீணா தாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

முன்னதாக இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் மார்ச் 27-ந் தேதி மாலை 6.40 மணியளவில் வெளியாகும் என்று படக்குழு முன்பே அறிவித்திருந்தது.

இந்நிலையில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “கே.ஜி.எஃப்- சாப்டர் 2”-வின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும், படம் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.