‘கேஜிஎப்’ ராக்கி பாய் போல் முழு சிகரெட் பேக்கெட்டை புகைத்த 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி - அதிர்ச்சி சம்பவம்
உலகமெங்கும் மிகவும் பிரமாண்டமாக ஏப்ரல் 14ம் தேதி, யாஷின் கே.ஜி.எப் 2 திரைப்படம் வெளியானது. கேஜிஎஃப் 2 ஆம் பாகம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரிலீசுக்கு முன்பே போட்ட பணத்தை விட பல மடங்கு அதிகமான லாபத்தை பெற்றுவிட்டது. 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட கேஜிஎஃப் 2 படம் உலகம் முழுவதும் நேற்று வரை 1000 கோடிகளை கடந்து வசூல் செய்து வருகிறது.
இந்நிலையில், தெலுங்கானா மாவட்டம், ஐதராபாத்தில் உள்ள 15 வயது சிறுவன் 2 நாட்களில் 3 முறை இப்படத்தை பார்த்துள்ளான். ‘ராக்கி பாய்’ வேடத்தில் வரும் நடிகர் யாஷின் நடிப்பில் இவன் மிகவும் கவர்ந்து ஈர்க்கப்பட்டுள்ளான். ராக்கி பாய் போன்றே ஒரு முழு சிகரெட் பேக்கையும் ஒரே மூச்சில் புகைத்திருக்கிறான்.
இதனையடுத்து, திடீரென்று அச்சிறுவனுக்கு கடுமையான தொண்டை வலி மற்றும் இருமல் ஏற்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அச்சிறுவனை ஐதராபாத்தில் உள்ள செஞ்சுரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சைக்குப் அளித்து சிறுவனை காப்பாற்றியுள்ளனர். இது குறித்து நுரையீரல் துறை மருத்துவர் ரோகித் ரெட்டி பாதுரி பேசுகையில், ‘ராக்கி பாய்’ போன்ற வேடங்கள் சிறுவர்களை மிகவும் கவர்ந்துவிடுகிறது.
இச்சிறுவன் ஒரு முழு சிகரெட் பேக்கையும் புகைத்ததில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளான். நமது சமூகத்தில் திரைப்படங்கள் அதிக தாக்கம் ஏற்படுத்தக்கூடியது.
இதனால், சிகரெட் புகைத்தல், புகையிலை போடுதல் அல்லது மதுபானம் குடித்தல் போன்ற செயல்களை, கவர்ந்திழுக்கும் விஷயங்களாக ஆக்காமல் பார்த்து கொள்ளும் பொறுப்பு தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு மிக முக்கியம்.
பெற்றோர்களும், தங்களுடைய குழந்தைகள் என்ன செய்கிறார் என்று கவனிக்க வேண்டும். புகைபிடித்தல், மதுபானம் அருந்துதல் போன்றவற்றின் தீய விளைவுகளை பற்றி அவர்களுக்கு எடுத்து கூற வேண்டும் என்று கூறினார்.
