ஓடிடியில் வெளியாகும் கேஜிஎஃப்-2 ... மகிழ்ச்சியில் ரசிகர்கள்

KGF Chapter 2
By Petchi Avudaiappan May 31, 2022 10:46 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகர் யாஷ் நடித்துள்ள  கேஜிஎஃப்-2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஹோம்பாலே தயாரிப்பில் யாஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் கேஜிஎஃப்.இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதையடுத்து ரூபாய் 100 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரமாண்டமாக இதன் 2 ஆம் பாகம் தயாரானது. 

பெரும் எதிர்பார்ப்போடு கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியான கேஜிஎஃப்-2 வசூலில் பிரமாண்ட சாதனைப் படைத்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான இப்படம் இதுவரை 1238 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. 

இந்த படத்தில் படத்தில் நடிகர் யஷுடன், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் பிரகாஷ் ராஜ், ஈஸ்வரி ராவ், அர்ச்சனா ஜோயிஸ் ஆகியோர் நடித்திருந்தனர். 

50வது நாளை வெற்றிகரமாக எட்டியுள்ள கேஜிஎஃப்-2 படம் அமேசான் பிரைமில் வருகிற ஜூன் 3 ஆம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.